ஆத்மா, மோட்சம்_நரகம் - பெரியார்
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.
இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்
நமக்குக் கடவுளைப் பற்றியாவது, மதத்தை பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாட்டை உடைத்து விடுதலையை உண்டாக்கவேண்டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும் அநேக தடவைகளில் வெளியிட்டிருக்கிறோம்.
அதுவும் பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளையும், மதத்தையும் கொண்டுவந்து குறுக்கே போட்டுவிட்டதால்தான் நாம் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றேயொழிய உண்மையில் கடவுளையும், மதத்தையும் பற்றிப் பேசவேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை.
.......மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும் கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரணகாரியம் தோன்றிய பின்பு, அந்நினைப்பு கொஞ்சம கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பத்தாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.......
.........மதம் மக்களைக் கொழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும், உலக சம்பவங்களின் உண்மைக் காரணகாரியங்கள் உணர்வதர்கில்லாமல், நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். .....
.....உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும், ஒரு துளி சாம்பல் அவன் மேல்பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாவமும் தீர்ந்து நேரே "கைலையங்கிரிக்கு"ப் போய்விடலாம் என்கிறான் என்றால் சிவனின் யோக்கியத்திற்கும், சைவ சமையத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?.....
படித்தால் கிடைக்கும்; மதங்களின் மற்றொரு பரிணாமம்.
டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Comments
Post a Comment