நீ

நீ நன்று
உன் நினைவுகள் நன்று

உன் விழி அழகு...
உன் மொழி அழகு...

இடை வரை நீண்ட முடி அழகு
கொலுசிலா கால் அழகு

உன்னோடு பேசுதல் இனிமை
பார்த்தலும் இனிமை
தனிமையில் உன் நினைவுகளும் இனிமை

புன்னகை நன்று
நீ போடும் கோலம் அழகு

விரல்கள் செய்யும் வித்தைகள் அழகு
நீ செய்யும் ஜாடைகள் இனிமை

தேடல் சுகம்
காத்துக் கிடத்தலும் சுகம்...

நடை அழகு...
உடை நன்று...
பற்கள் நன்று...
பவளவாய் நன்று...

உதடுகள் கொடுக்கும் முத்தங்கள் இனிமை
பிரவுகள் கொடுமை
ஊடல் நன்று கூடல் இனிமை

கைகள் சிறுமை...
இடையும் சிறுமை...

நெற்றி புதுமை
குங்குமம் நன்று...

காதுகள் அழகு
கழுத்தில் அணிகள் அழகு

நீ கொள்ளும் கோபம் நன்று...
சாந்தமும் நன்று...

நீ நன்று
நினைவுகளும் நன்று...

Comments

Popular posts from this blog

அகிலன்

டிசைனருக்கு தேவையான இணைய தளங்கள்