கேட்காதே!
சின்னதாய்
ஓர் ஆசை
நான் வெட்டுக்கிளியாவேனோ?
சமுதாயத்தில்
பயிர்களைவிட
களைகள் அதிகமாய் விளைகிறது...
வெட்ட நினைக்கிற
என்னை
தேசியவாதியாக்க வேண்டாம்...
தீவிரவாதியாக்காமல் இருங்கள்
இந்த சமுதயாத்தை குளிப்பாட்ட
குற்றாலத்தை கொண்டு வந்தாலும்
கூவமாக மாறிவிடும்
எனக்கு
அரசியல் பிடிக்கும்!
அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை...
இலஞ்சம்
இடுவதும் பெறுவதும்...
அலுவலக இலட்சணம்...
இவர்களை
நல்லவன் ஆண்டாலென்ன?
மற்றவன் ஆண்டாலென்ன?
பட்டித் தொட்டியெங்கும்
சட்டி யேந்தி
சாதம் திண்ண ஆசை
பலசாதி இரத்தம்
என் உடலில் ஊறாதோ?
விட்டில் புச்சியை
விளக்காய் நினைக்கும் வரை
இருட்டில் நடக்கும்
இதிகாசங்கள் தெரிவதில்லை
இன்னொரு முறை
கேட்காதே!
சமுதாயம் என்னவென்று?
ஓர் ஆசை
நான் வெட்டுக்கிளியாவேனோ?
சமுதாயத்தில்
பயிர்களைவிட
களைகள் அதிகமாய் விளைகிறது...
வெட்ட நினைக்கிற
என்னை
தேசியவாதியாக்க வேண்டாம்...
தீவிரவாதியாக்காமல் இருங்கள்
இந்த சமுதயாத்தை குளிப்பாட்ட
குற்றாலத்தை கொண்டு வந்தாலும்
கூவமாக மாறிவிடும்
எனக்கு
அரசியல் பிடிக்கும்!
அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை...
இலஞ்சம்
இடுவதும் பெறுவதும்...
அலுவலக இலட்சணம்...
இவர்களை
நல்லவன் ஆண்டாலென்ன?
மற்றவன் ஆண்டாலென்ன?
பட்டித் தொட்டியெங்கும்
சட்டி யேந்தி
சாதம் திண்ண ஆசை
பலசாதி இரத்தம்
என் உடலில் ஊறாதோ?
விட்டில் புச்சியை
விளக்காய் நினைக்கும் வரை
இருட்டில் நடக்கும்
இதிகாசங்கள் தெரிவதில்லை
இன்னொரு முறை
கேட்காதே!
சமுதாயம் என்னவென்று?
Comments
Post a Comment