வெளிச்ச இரவுகள்
பாலைவனமாய்
பாய் விரித்துக் கிடந்த பகலொன்றில்
பரிட்சயமற்ற பரமனின் பாதங்களில்
சூரியன் சுட்டெரிப்பதால்
நீ பகலை இரவாக்கினாய்
பாலைவனத்தை...
உன்னை சுற்றியே கிடக்கின்ற
நிழலைப் போல் என்னை கட்டிவைத்தாய்
நீர் துளிகளாய் மேலே வீழ்ந்து
குளிரவைத்தாய் - தாகம் தீர்த்தாய்...
பகலொன்று இரவாய் மாற்றிய
மகத்துவ நாளொன்றில் - பேசாத விழிகள்
வார்த்தைகள் பலவற்றை கற்றுக்கொண்டு
உதட்டு நாயகனையும் நாக்கு பிள்ளையையும்
ஒரு முறை ஊமையாக்கிவிட்டு
வெகுநேரமாய் மௌனங்களை வார்த்தைகளை
வசனங்களாக மாற்றி மாற்றி பிம்ப
மாறுபாடுகளை உண்டாக்கி மறுதலையற்ற
செல்லாக்காசுகளாக மாறிப் போன
எண்ணிலொரு வித்தைகள் உருவாக்கினாய்
நீ வந்த பின் எண்ணற்ற
இரவுகள் வெளிச்ச இரவுகள்...
பாய் விரித்துக் கிடந்த பகலொன்றில்
பரிட்சயமற்ற பரமனின் பாதங்களில்
சூரியன் சுட்டெரிப்பதால்
நீ பகலை இரவாக்கினாய்
பாலைவனத்தை...
உன்னை சுற்றியே கிடக்கின்ற
நிழலைப் போல் என்னை கட்டிவைத்தாய்
நீர் துளிகளாய் மேலே வீழ்ந்து
குளிரவைத்தாய் - தாகம் தீர்த்தாய்...
பகலொன்று இரவாய் மாற்றிய
மகத்துவ நாளொன்றில் - பேசாத விழிகள்
வார்த்தைகள் பலவற்றை கற்றுக்கொண்டு
உதட்டு நாயகனையும் நாக்கு பிள்ளையையும்
ஒரு முறை ஊமையாக்கிவிட்டு
வெகுநேரமாய் மௌனங்களை வார்த்தைகளை
வசனங்களாக மாற்றி மாற்றி பிம்ப
மாறுபாடுகளை உண்டாக்கி மறுதலையற்ற
செல்லாக்காசுகளாக மாறிப் போன
எண்ணிலொரு வித்தைகள் உருவாக்கினாய்
நீ வந்த பின் எண்ணற்ற
இரவுகள் வெளிச்ச இரவுகள்...
Comments
Post a Comment