Posts

Showing posts from November, 2011

கேட்காதே!

சின்னதாய் ஓர் ஆசை நான் வெட்டுக்கிளியாவேனோ? சமுதாயத்தில் பயிர்களைவிட களைகள் அதிகமாய் விளைகிறது... வெட்ட நினைக்கிற என்னை தேசியவாதியாக்க வேண்டாம்... தீவிரவாதியாக்காமல் இருங்கள் இந்த சமுதயாத்தை குளிப்பாட்ட குற்றாலத்தை கொண்டு வந்தாலும் கூவமாக மாறிவிடும் எனக்கு அரசியல் பிடிக்கும்! அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை... இலஞ்சம் இடுவதும் பெறுவதும்... அலுவலக இலட்சணம்... இவர்களை நல்லவன் ஆண்டாலென்ன? மற்றவன் ஆண்டாலென்ன? பட்டித் தொட்டியெங்கும் சட்டி யேந்தி சாதம் திண்ண ஆசை பலசாதி இரத்தம் என் உடலில் ஊறாதோ? விட்டில் புச்சியை விளக்காய் நினைக்கும் வரை இருட்டில் நடக்கும் இதிகாசங்கள் தெரிவதில்லை இன்னொரு முறை கேட்காதே! சமுதாயம் என்னவென்று?

பொன்மொழிகள் 1

நாம் அமைதியாக இருந்தால் தெய்வங்கள் மெதுவாக பேசுவதைக்கூட கேட்கலாம் அமைதியாய் இருப்பவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை இன்பத்தின் இரகசியம் நீங்கள் விரும்புவதை செய்வதில் அல்ல... நீங்கள் செய்வதை பிறர் விரும்புவதில் இருக்கிறது... எல்லோருடைய இடத்தையும் தாய் வகிக்க முடியும்... தாயின் இடத்தை யாரலும் வகிக்க முடியாது... சாக்கு கூறும் ஆற்றல் பெற்றவன். சாதனை எதுவும் செய்வதற்கு தகுதியற்றவன்... நம்மை நாமே மௌனாய் அடக்கி ஆள்வதிலிருந்து உண்மையான சிறப்பு பிறக்கிறது... இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்... வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப் படாதே... கடமையை செய்து வா... உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துக் கொள்... எதற்கும் தயாராய் இருப்பவனைத் தேடித்தான் வாய்ப்புகள் வரும்... -சிஸரோ அழகென்பது செயலில் தான் இருக்கிறது... அதைத் தவிர வேறு அழகில்லை. - கோலியர் அமைதியிலும் அசையா உறுதியிலும் உன் வலிமை இருக்கிறது - ஏஸியா தைரியமாக தன்னை அறிந்துக் கொண்டு செயல்படுபவர்களை இந்த உலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறது...  - ஜோர்பான் டி.எஸ்

அந்த முட்டாள் வேணு

 "லட்சுமணா! ஏன் வேணுவைப் பற்றிப் பேசும் பொழுது எல்லாம், அந்த முட்டாள் வேணு என்று சொல்லுகிறார்கள்!" என்று கேட்டேன்.      "என்னப்பா? வேணுவைப்பற்றி உனக்குத் தெரியாதா? மாம்பலத்திலிருந்து கொண்டு, வேணுவைப் பற்றித் தெரியாதென்றால் அதிசயமாக இருக்கிறது."      அவருக்கு அதிசயமாக இருந்தாலும், எனக்குத் தெரியாதென்று ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. உடனே உற்சாகமாக கதை சொல்லவாரம்பித்தார்:  வேணுவைப்பற்றி உனக்குத் தெரியுமே. அவன் இங்கு தான் ஒரு பெரிய ஷாப்பு வைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுதும் மாம்பலத்தில்தான் குடியிருந்தான். அங்கிருந்துதான் கடைக்கு வருவதும் போவதுமாக இருந்தான்.      ஒரு நாள் சாயங்காலம் போர்ட் ஸ்டேஷனில் புறப்பட்டான். அப்பொழுது மின்சார ரயில் போடப்படவில்லை. டிக்கட்டை வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் மனம் பித்தம் பிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தது. அன்று ரயிலில் கூட்டமில்லை.      பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு அழகான பெண் ரயிலில் ஏற வந்தாள். பார்த்ததும், அவன் மனம் பித்துப் பிடித்தது போலாயிற்று. அவனும் அவள் பின்னோடேயே தொடர்ந்த

வெளிச்ச இரவுகள்

பாலைவனமாய் பாய் விரித்துக் கிடந்த பகலொன்றில் பரிட்சயமற்ற பரமனின் பாதங்களில் சூரியன் சுட்டெரிப்பதால் நீ பகலை இரவாக்கினாய் பாலைவனத்தை... உன்னை சுற்றியே கிடக்கின்ற நிழலைப் போல் என்னை கட்டிவைத்தாய் நீர் துளிகளாய் மேலே வீழ்ந்து குளிரவைத்தாய் - தாகம் தீர்த்தாய்... பகலொன்று இரவாய் மாற்றிய மகத்துவ நாளொன்றில் - பேசாத விழிகள் வார்த்தைகள் பலவற்றை கற்றுக்கொண்டு உதட்டு நாயகனையும் நாக்கு பிள்ளையையும் ஒரு முறை ஊமையாக்கிவிட்டு வெகுநேரமாய் மௌனங்களை வார்த்தைகளை வசனங்களாக மாற்றி மாற்றி பிம்ப மாறுபாடுகளை உண்டாக்கி மறுதலையற்ற செல்லாக்காசுகளாக மாறிப் போன எண்ணிலொரு வித்தைகள் உருவாக்கினாய் நீ வந்த பின் எண்ணற்ற இரவுகள் வெளிச்ச இரவுகள்...

நீ

நீ நன்று உன் நினைவுகள் நன்று உன் விழி அழகு... உன் மொழி அழகு... இடை வரை நீண்ட முடி அழகு கொலுசிலா கால் அழகு உன்னோடு பேசுதல் இனிமை பார்த்தலும் இனிமை தனிமையில் உன் நினைவுகளும் இனிமை புன்னகை நன்று நீ போடும் கோலம் அழகு விரல்கள் செய்யும் வித்தைகள் அழகு நீ செய்யும் ஜாடைகள் இனிமை தேடல் சுகம் காத்துக் கிடத்தலும் சுகம்... நடை அழகு... உடை நன்று... பற்கள் நன்று... பவளவாய் நன்று... உதடுகள் கொடுக்கும் முத்தங்கள் இனிமை பிரவுகள் கொடுமை ஊடல் நன்று கூடல் இனிமை கைகள் சிறுமை... இடையும் சிறுமை... நெற்றி புதுமை குங்குமம் நன்று... காதுகள் அழகு கழுத்தில் அணிகள் அழகு நீ கொள்ளும் கோபம் நன்று... சாந்தமும் நன்று... நீ நன்று நினைவுகளும் நன்று...

இனிவரும் காலம்

சித்திரையில் நித்திரையின்றி தவித்த என்னில் வசந்த காலமாய் வந்தவளே... பேசிக்கிடந்த என் உதடுகளை அடைத்துவிட்டு ஊமையாய் கிடந்த விழிகளை வாயாடியாக்கிவி்ட்டாய்... வீதியெங்கும் பாதசுவடுகள் ஏராளம் உன் பாதச் சுவட்டை தேடியே - என் காலக் கணக்கு தொடங்குகிறது... நிறைமாத கர்பிணியாய் நெஞ்சில் உன்னை சுமந்து காதலை பிறப்பிக்கிறேன் என் பிறப்பும் நீயே... இறப்பும் நீயே...

அன்று இரவு

1 அரிமர்த்தன பாண்டியன்      நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில் பகிர்ந்து கொண்டு, வளையல் விற்று, சாட்சி சொல்லி, சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்துவரும் சொக்கேசன், அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவானுக்கு உறக்கம் ஏது? ஊண் ஏது? அடுத்த நாள் ஓர் அரசன்; பாண்டியன், அரிமர்த்தன பாண்டியன், இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்கிருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடிவந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் சரக்கூடம் போட்டன; நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்கரவியூகம் போட்டது. பிரகாசம் கண்ணைத் குத்தித் தூக்கத்திற்கு ஊறு விளைக்காமல் இருப்பதற்காக அமைத்த நீலமணி விளக்கு, அவனது மார்பில் கிடந்த ஆரத்தில் பட்டு, சற்று அசையும்போது மின்னியது. கை விரல் மோதிரத்தை நெருடிக்கொண்டே சாளரத்தின் வழியாகத் தெரிந்த சிறிய துண்டு வான்வெளியை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு