Posts

Showing posts from September, 2011

புதுமைப்பித்தன் - ஓர் சகாப்தம்

Image
புதுமைப்பித்தன்  என்ற  புனைப்பெயர்  கொண்ட சொ. விருத்தாசலம் ( ஏப்ரல் 25 , 1906  -  மே 5 ,  1948 ), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். [1] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. வாழ்க்கை குறிப்பு  புதுமைப்பித்தன்  கடலூர்  மாவட்டத்தில் உள்ள  திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச்  செஞ்சி ,  திண்டிவனம் ,  கள்ளக்குறிச்சி  ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான  திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில்  திருவனந்தபுரத்தைச்  சேர்ந்த கமலாவை மணந்தார். [6] [7] [